பெயர் : தி.ஆனந்த்
படிப்பு : MA.,M.Ed.,M.Phil.,Ph.d
பதவி: ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
பள்ளி : ஊ.ஒ.ந.நி.பள்ளி (SSA), காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம், திருவாரூர்.
2010, Sep 15 முதல் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக மேற்கண்ட பள்ளியில் பணி செய்து வருகிறேன்.
நான் அரசு பள்ளியில் படித்தவன் ....BA ஆங்கிலம் முடித்த பின் சென்னை சென்றேன்....அப்போது எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது....எனவே பல MNC ல் நேர்முக தேர்வில் நிராகரிக்கப்பட்டேன்....பின் பயிற்சி செய்து Siemens நிறுவனத்தில் வேலைபெற்றேன்......என்னைபோல் என் மாணவர்கள் கஷ்ட பட கூடாது என்பதற்காக அவர்களின் ஆங்கில திறனை மேம்பட செய்ய விளையாட்டு முறையில் (Play way method) பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறேன். 400க்கும் மேற்பட்ட Verb களை செய்கை மூலம் பயிற்சியளித்து அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் திறன் மிக்கவர்களாக விளங்கி வருகின்றனர்.....எங்கள் காளாச்சேரி மேற்கு கிராமத்திலிருந்து எந்தவொரு மாணவரும் தனியார் பள்ளியில் படிக்கவில்லை என்பதை பெருமிதத்துடன் கூறுகிறேன்.
6 முதல் 8 வரையிலான ஆங்கில பாடத்தினை Video lesson ஆக தயார்செய்து எங்கள் பள்ளியில் பயன்படுத்தி வருகிறேன்....மற்ற பள்ளிகளும் பயன்பெற Youtube ல் பதிவேற்றம் செய்துள்ளேன்....Scert யிலும் ஒப்படைத்துள்ளேன்....
எங்கள் பள்ளியை சுற்றி வீடுகள் அமைந்திருக்கும். சுற்றுச்சுவர் கிடையாது. இதனால் மாணவர்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை. இடைவேளையின் போது அருகாமையில் உள்ள மாணவிகள் வீட்டிற்கு சென்று.... கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். தற்போது வெளிநாட்டு நண்பர்கள் உதவியுடன் ரூ 3.90000 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டும், Tiles, round tables (for ALM class), Interactive Smart Board, R.O system, etc.. போன்றவைகளையும் பெற்றள்ளோம்......
நான் 2010ல் அப்பள்ளியில் பணியேற்ற ஒருசில மாதங்களில் அங்கு படிக்கும் மாணவர்களில் 15 க்கும் மேற்பட்டோர் தாய் அல்லது தந்தையின்றி இருந்தனர். அவர்கள் அனைவரும் சிறு சிறு பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்து இறந்திருந்தனர். நானும் சிறுவயதிலேயே எனது தாய், தந்தையை இழந்துவிட்டதால் (உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர்). என்னை போன்று அவர்களும் ஆதரவின்றி நின்றனர். விசாரனையில் அக்கிராமத்தில் பல ஆண்டுகளாக தற்கொலை மரணங்கள் அதிகமாக நடைபெற்று வருவதை தெரிந்துகொன்டேன். 2011 முதல் விடுமுறை நாட்களில் மாணவர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கடந்த 6 வருடமாக தற்கொலை மரணமின்றி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வருகிறோம்....
மாணவர்கள் பெற்ற விருதுகள்: Gujarat ல் நடைபெறும் தேசிய அளவிளான.....போட்டி
Design for change : 2013
Design for change : 2014 (2)
Design for change : 2015
டெல்லியில் நடைபெறும் கல்வி மற்றும் சமுதாய செயல் திட்ட போட்டி:
2016 : 5 தங்கப்பதக்கம் & ரூ.50000 ரொக்கப்பரிசு
2017 : 5 தங்கப்பதக்கம் & ரூ.50000 ரொக்கப்பரிசு
கற்கும் கல்வியை தனக்கும் தனது சமுதாயத்திற்கும் முழுமையாக பயன்படுத்தி வரும் எனது மாணவர்களை பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.....அனைவருக்கும் நன்றி....
No comments:
Post a Comment