Tamil


                                                                         
FA ALL SUBJECTS COLLECTIONS

FACE BOOK LINK -1

FACE BOOK LINK 2


GOOGLE DRIVE LINK










       எழுத்திலக்கணம் 



முதலெழுத்துக்கள்

1.உயிரெழுத்துக்கள்
2.மெய்யெழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள்

01. உயிர்மெய் எழுத்துக்கள்
02. ஆய்த எழுத்து
03. உயிரளபெடை
04. ஒற்றளபெடை
05. குற்றியலுகரம்

நெடில் தொடர் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன் தொடர் குற்றியலுகரம்
மென் தொடர் குற்றியலுகரம்
இடைத் தொடர் குற்றியலுகரம்

06. குற்றியலிகரம்
07. ஐகாரக்குறுக்கம்
08. ஒளகாரக்குறுக்கம்
09. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

உயிர் எழுத்துக்கள் – 12
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,
ஔ.
குறில் எழுத்துக்கள் – 5
அ,இ,உ, எ, ஒ.
நெடில் எழுத்துக்கள் – 7
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

மெய் எழுத்துக்கள் – 18
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்,
ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

மெய் எழுத்துக்கள் மூன்று வகை

வல்லின எழுத்துக்கள் – 6
க், ச், ட், த், ப், ற்

மெல்லின எழுத்துக்கள் – 6
ங், ஞ், ண், ந், ம்,ன்

இடையின எழுத்துக்கள் – 6
ய், ர், ல், வ், ழ், ள்
ஆய்தவெழுத்து – 1


விளக்கம்:
உயிர் எழுத்துக்கள் – 12
மெய் எழுத்துக்கள் – 18
உயிர்மெய் எழுத்துக்கள் – 216
ஆய்த எழுத்து – 1
மொத்தம் – 247
உயிர்மெய்க்குறில் – 95
18 மெய்யோடும் 5
உயிர்க்குறிலும்
தனித்தனியே சேரும்போது 18
X 5 = 90 உயிர்மெய்க்குறில்
ஆகும். இத்துடன் 5
உயிர்க்குறிலையும்
சேர்த்தால் உயிர்மெய்க்குறில்
(90 + 5) = 95 ஆகும்.
உயிர்மெய்நெடில் – 133
18 மெய்யோடும் 7
உயிர்நெடிலும் தனித்தனியே
சேரும்போது 18 X 7 = 126
உயிர்மெய்நெடில் ஆகும்.
இத்துடன் 7 உயிர்நெடிலையும்
சேர்த்தால் உயிர்மெய்நெடில்
(126 + 7) = 133 ஆகும்.
ஒற்று எழுத்துக்கள் – 19
மெய் 18, ஆய்தம் 1. ஒற்று
எழுத்துக்கள் (18 + 1 = 19) 19
ஆகும்.

விளக்கம்
உயிர்மெய்க்குறில் – 95
உயிர்மெய்நெடில் – 133
ஒற்று எழுத்துக்கள் – 19
மொத்தம் – 247

மொழிக்கு முதலில் வரும்
எழுத்துக்கள் 21

உயிர் எழுத்துக்கள் = 12

வல்லின எழுத்துக்கள் = க, ச, த, ப
= 4
மெல்லின எழுத்துக்கள் = ஞ, ம, ந
= 3
இடையின எழுத்துக்கள் = ய,வ =
2

மாத்திரை
இயல்பாக ஓர் எழுத்தை
ஒலிப்பதற்கு எடுக்கும் நேரம்
மாத்திரை ஆகும். இந்த
அளவினைக் கொண்டே தமிழ்
எழுத்துக்கள்
வகைப்படுத்தப்படுகின்றன.
ஒரு மாத்திரை கால அளவு
என்பது கைவிரல் நொடிக்கும்
நேரம், அல்லது
கண்ணிமைக்கும் நேரம்
எனவும் ஆகும்.

உயிர் எழுத்துக்கள் 12

அ,இ,உ, எ, ஒ ஆகிய ஐந்தும்
குறில் எழுத்துக்களையும்
ஒலிப்பதற்கு எடுக்கும் கால
அளவு 1 மாத்திரை.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு
நெடில் எழுத்துக்களையும்
ஒலிப்பதற்கு எடுக்கும் கால
அளவு 2 

மாத்திரைகள்.

மெய் எழுத்துக்கள் 18

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல்,
வ், ழ், ள், ற், ன் ஆகும். இவை
ஒவ்வொன்றும் அரை (1/2)
மாத்திரை உடையது.

குறில் உயிர்மெய் 

எழுத்துக்கள் (5
X 18) = 90
இவை ஒவ்வொன்றும் ஒரு
மாத்திரை கொண்டு இயங்கும்.

நெடில் உயிர்மெய்

 எழுத்துக்கள் (7
X 18) = 126
இவை ஒவ்வொன்றும் இரு
மாத்திரை கொண்டு இயங்கும்.

விளக்கம்:
குறில் எழுத்துக்கள் – 1
நெடில் எழுத்துக்கள் – 2
மெய் எழுத்துக்கள் – 1/2
குறில் உயிர்மெய்
எழுத்துக்கள் – 1
நெடில் உயிர்மெய்
எழுத்துக்கள் – 2
ஆய்த எழுத்து – 1/2

ஆய்த எழுத்து

இதற்கு அஃகேனம், தனிநிலை,
புள்ளி, ஒற்று என்னும் வேறு
பெயர்களும் உண்டு.
இவ்வெழுத்தானது தனக்கு
முன்னர் ஒரு குறிலையும்,
பின்னர் ஒரு வல்லின
உயிர்மெய் எழுத்தையும்
பெற்றே வரும்.
எ.கா:
அஃது – ‘அ’ குறில். ‘து’ வல்லின
உயிர்மெய்
இஃது – ‘இ’ குறில். ‘து’ வல்லின
உயிர்மெய்



கோ.அரிபாபு
அரக்கோணம்.                                                           






                                                       ஙி
==
வணக்கம். நான் தான் ஙி பேசுகிறேன். இதைப் படித்ததற்கு அப்புறம் தான் தமிழில் இப்படி
ஒரு எழுத்து இருப்பதே உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். என் குடும்பத்தில் ங் என்ற இந்தப்பெண் மட்டுமே பிரபலம். ஙே என்ற என் சகோதரி தற்போது பிரபலம் அடைந்து வருகிறாள்.
ஙு , ஙூ இவர்கள் சார்பாகவும் நானே பேசுகிறேன். பக்கத்து வீடான ஞ குடும்பத்தில் கூட சில தண்டச் சோறுகள் இருப்பதாக அறிகிறேன். ஞீ ஞூ இப்படி. இவைகளை நீங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட உச்சரித்து இருக்க மாட்டீர்கள். உச்சரித்தாலும் மூக்கால் உச்சரிக்க வேண்டும்.
எங்கள் பக்கத்து வீடுகளான க மற்றும் ச வீடுகளில் உள்ளவர்களைப் பார்க்கையில் எனக்குப் பொறாமையாக இருக்கும். அங்கே எல்லாரும் பிஸி . காலையில் இருந்து இரவு வரை ஓடிக் கொண்டே இருப்பார்கள். எங்கள் வீடு தான் துக்கம் விழுந்த வீடு போல மயான அமைதி. எங்கள் பாட்டி ங் மட்டுமே சளைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். அங்குமிங்கும் எங்கும் இன்னும் மங்காமல் எங்கும் தங்காமல்,தூங்காமல், தேங்காமல் ரிட்டயர்மெண்ட் வாங்காமல் !! . நாங்கள் எத்தனை நாள் தான் எங்கள் பாட்டியின் தயவில் தண்டச் சோறு சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பது. எங்களை வைத்து புதுச் சொற்களைக் கண்டுபிடியுங்களேன். நாங்கள் அடிக்கடி வருகிறோம். வீட்டிலேயே இருந்து இருந்து சலிப்பாக இருக்கிறது. social லைஃபே இல்லை. நாங்கள் என்ன அழகாக இல்லையா? என் சகோதரி ஙூ எப்படி இருக்கிறாள் பாருங்கள். ஆங், எங்கள் தூரத்து உறவினரான 'ஃ' பெரியம்மா கூட ஆங்கில F ஐ தமிழில் குறிக்க உபயோகமாக இருக்கிறாள். எங்களுக்கும் அப்படி ஏதாவது வேலை போட்டுக் கொண்டுங்களேன். உதாரணமாக Z என்பதை ஒரு வித ஜி என்று உச்சரிக்கிறார்கள். அதற்குத் தமிழில் உச்சரிப்பு இல்லை. ஸ வுக்கும் ஜ வுக்கும் இடைப்பட்ட உச்சரிப்பு. Z என்பதற்கு என்னை எழுதலாமே? எக்ஸ், வொய் , ஙி.Zoo என்பது தமிழில் ஜூ அல்ல. ஒருவித தேய்க்கும் ஜ் ஒலி . ஙூ என்று எழுதி என் சகோதரிக்கு வேலை கொடுக்கலாமே? எங்கள் குடும்பம் மூன்று வேளை சாப்பிடும்!
எனக்கு பக்கத்து வீட்டு சிறுக்கி -கி யைப் பிடிக்காது. எங்கள் வேலைகளைப் பிடுங்கிக் கொண்டவள் அவள்.
மங்கி சங்கி என்பதில் நீங்கள் ஏன் எங்களை அழைக்கக் கூடாது? மங்கி சங்கி என்பதை மஙி சஙி என்று எழுதித்தான் பார்க்கலாமே? அப்படியே மஞ்சம் என்பதில் அந்த சிறுக்கி ச எதற்கு? மஞம் போதும் ! ப்ளீஸ், எங்களுக்கும் உங்கள் சமூகத்தில் ஓர் இடம் கொடுங்கள். எங்களை வீட்டுச் சிறையில் இருந்து மீட்டெடுங்கள். அல்லது எங்களை வைத்துப் புதிய ஓர் எழுத்து ஒருணொஷொ மொழிகளை உருவாக்குங்களேன். ஙீ - இணையப் போராளி ஙூ - சோனை இப்படி.
நன்றி. ஸீ யூ ஸூன்  நன்றி ; மது ஸ்ரீதரன்                                 





                                         லகர ழகர ளகர  வேறுபாடுகள்: 

உளவு - வேவு
உழவு - பயிர்த்தொழில்
உழ - பண்படுத்த
உள - உள்ளன
உழி - இடம்; பக்கம்

 உலுக்கு - குலுக்கு, அசை; 
உளுக்கு - சுளுக்கு
உல் - தேங்காய் உரிக்கும் கருவி
உள் - உட்புறம்
உல்கு - சுங்கம்
உள்கு - நினை
உல்லம் - ஒரு மீன்
உள்ளம் - மனம்

🌸🌸

 எலும்பு - எலும்பு
எழும்பு - உயர்
எல் - பகல், ஞாயிறு
எள் - ஓர் செடி, நிந்தை

 எள்ளி என்பதை யோர்க

🌸🌸

கலம் - பாத்திரம், அளவு
களம் - மிடறு, போர்க்களம்; நெற்களம்; இடம்
கலவு - கூட்டு (கலத்தல்)
களவு - திருட்டு
கலி - ஒலி, வறுமை
களி - மகிழ்ச்சி, ஓர் உணவு
கழி - நீக்கு

🌸🌸

கல்வி - படிப்பு
கள்வி - திருடி
காலம் - பருவம்
காளம் - கருமை, நஞ்சு (காளமுகில் ; காளம் ஒரு அரிய தமிழ்ச்சொல்)

🌸🌸

கிலி - அச்சம் (இது தெலுங்குச் சொல்)
கிளி - கிளிப்பிள்ளை
கிழி - கிழிப்பாய்

🌸

குலை - கொத்து
குழை - தளிர் இலை,, இளகச்செய், சேர்த்துக் குழை

🌸🌸

கூலம் - கடைவீதி
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி - பேய், பெருங்கழுகு

🌸🌸

கேழ் - ஒப்பு, ஒளி, நிறம் 
கேள் - கேட்பாய், உறவு (யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
கேலி - பகடி (கேலி, பரிகாசம் என்பன சமற்கிருத ஆரியச் சொற்கள், பகடி கிண்டல் என்பவை தமிழ்)

🌸🌸

 கொலு - நிமிர்ச்சி, குமுகம்
கொழு - ஏரின் முனை, காறு
கொளு - பாட்டின் கருத்தினை விளக்குஞ் சொற்றொடர் (இந்த கொளு என்பதே க்ளூ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியிருக்கக் கூடும்!)

 கொலை - கொல்லுதல்
கொளை - இசைப்பாட்டு
கொல் - கொல்லன், கொல்லு
கொள் - வாங்கு, கொள்ளு எனும் தவசம் (தானியம் என்பது தமிழில் தவசம்)

 கொல்லி - ஒரு மலை
கொள்ளி - நெறுப்புறு விறகு
கொல்லை - தோட்டம்
கொள்ளை - கொலை, விலை

🌸🌸

 கோலம் - அழகு, தமிழ்ப்பெண்டிர் வாசலிலிடும் கோலம்
கோளம் - உருண்டை 
கோழி - கோழி
கோளி - அத்தி
கோல் - அம்பு, ஊன்றுகோல், எழுதுகோல்
கோள் - புறங்கூறல், கோள் சொல்லுதல்

🌸🌸

சுல்லி - அடுப்பு
சுள்ளி - சிறு விறகு

🌸🌸

சூலி - பிள்ளைத் தாச்சி (கர்ப்பிணி என்பது ஆரியம்), சூல் கொண்ட முகில்
சூழி - உச்சி
சூளி - ஆண்மயிர்

சூலை - ஒரு நோய்
சூளை - செங்கற் சூளை
சூல் - கருவுறுதல்
சூழ் - சுற்றிச் சூழ்தல்
சூள் - சூளுரை, ஆணை, அருஞ்சூள் (அன்னைத் தமிழ்மேல் அருஞ்சூள் உரைத்தெழுந்தோம்)... (சபதம் என்பது ஆரியம்)

🌸🌸

 செதில் - மரச்செதில்
செதிள் - மீன் செதிள்

 செல்லு - கழிவு 
செள்ளு  - ஒரு பூச்சி , தெள்ளுப்பூச்சி
🌸🌸


சோலி - கருமம் (இதுவும் தெலுங்குச்சொல்)
சோளி (பிச்சைக்காரர் பை) ....ஜோல்னா பை என்பது தொங்கு பை இது உருதுச் சொல், ஜோல்னா என்றால் ஊஞ்சலாடுதல்
🌸🌸

தாலி - தாலிக்கயிறு
தாளி - பனை
தாழி - குடம், சாடி, (முதுமக்கள் தாழி)

🌸

நலி - வருந்துதல், நலிவடைதல்
நளி - நெருக்கம், குளிர்
நல்லார் - நல்லவர்

நள்ளார் - பகைவர்









                                                              அளபெடை

1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை


உயிரளபெடை

உயிரெழுத்துக்களில்
நெட்டெழுத்துக்கள் ஏழும்
தத்தமக்குரிய இரண்டு
மாத்திரைகளிலிருந்து நீண்டு ஒலிக்கும்போது
உயிரளபெடை என்று பெயர்
பெறுகிறது. மொழியின்
முதல், இடை, கடை ஆகிய மூன்று
இடங்களிலும் உயிர்நெடில் நீண்டு
அளபெடுக்கும்.

உதாரணம்:

ஓஓதல் வேண்டும் – முதலில்
அளபெடுத்தது.
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு –
இடையில் அளபெடுத்தது.
நல்ல படாஅ பறை – கடையில்
அளபெடுத்தது.

“இசை கெடின் மொழி முதல்
இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில்
குறி ஏ”- நன்னூல்

ஓர் உயிர்நெடில்
அளபெடுத்துள்ளதை
குறிப்பதற்கு அவ்வெழுத்தின்
இனமான குறில் எழுத்து
அடுத்து எழுதப்படும். இவற்றை
மேலும்: செய்யுளிசை அளபெடை,
இன்னிசை
அளபெடை, சொல்லிசை
அளபெடை எனவும் வகைப்படுத்தினர்.

ஒற்றளபெடை

ஒற்றெழுத்துக்கள் தமக்குரிய அரை
மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும்போது
ஒற்றளபெடை என்று பெயர்
பெறுகிறது.
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை
நிறைவு செய்யவதற்காக
மெய்யெழுத்துகளில் : ங், ஞ்,
ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும்
ஆய்தஎழுத்தும் மொழிக்கு இடை,
கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும்
குறிலிணையின் கீழும் அளபெடுக்கும்.
இதுவே ஒற்றளபெடை ஆகும்.

“ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை
கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ” –
நன்னூல்

உதாரணம்:

வெஃகு வார்க்கில்லை – குறிற்கீழ்
இடை
கண்ண் கருவிளை – குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை – குறிலிணைகீழ்
இடை
மடங்ங் கலந்த மன்னே – குறிலிணைகீழ் கடை
ஒற்றெழுத்து
அளபெடுத்துள்ளதை குறிப்பதற்குஅதே
எழுத்து அடுத்து எழுதப்படும்.



கோ.அரிபாபு
அரக்கோணம்.


உயிர் எழுத்துகள் அறிமுப்பாடல்

.   
அ என்று சொல்லியே அவல்பொறி தின்னலாம்.
ஆ என்று சொல்லியே ஆப்பம்ரெண்டு தின்னலாம். 
,,இடியாப்பம் ,, .
,, ஈச்சம்பழம் ,,. 
,, உளுந்துவடை,,. 
,, ஊத்தாப்பம்,, .
,, எள்ளுருண்டை,, . 
,, ஏப்பம்கொஞ்சம் விடலாம்.
,, ஐஸ்கிரீம் தின்னலாம். 
,, ஒருலட்டு,, 
,, ஓமப்போடி,, .
,, ஔடதமின்றி வாழலாம்.






மெய்யெழுத்துப்பாடல். 

க் என்று சொல்லியே அக்கா வீடு போகலாம். 
ங் என்று சொல்லியே நுங்கு நன்றாய் தின்னலாம்.
ச் ,, அச்சு வெல்லம் ,, .
ஞ்,, இஞ்சி  மிட்டாய் ,, .
ட் ,,லட்டு ஒன்று ,, .
ண்,, பண்டம் பலவும் ,, . 
த்,,தாத்தா பாட்டி பார்க்கலாம்.
ந்,, பந்து பம்பரம் கேட்கலாம். 
ப்,,அப்பா சட்டை போடலாம். 
ம்,, அம்மா முத்தம் பெறலாம். 
ய்,,கொய்யா பழம் வாங்கலாம். 
ர்,, தேர் திருவிழா போகலாம். 
ல்,, முல்லை பூ சூடலாம். 
வ்,,செவ்வாழை  தின்னலாம்.
ழ்,,தமிழ் பாடம் படிக்கலாம்.
ள்,,பள்ளிக் கூடம் போகலாம். 
ற்,, காற்று நன்றாய் வாங்காலாம். 
ன்,, மான் போல ஓடலாம்

No comments:

Post a Comment