Wednesday, 12 April 2017

உங்கள் பகுதியில் 6 முதல் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் (தனியார் பள்ளி/ அரசுப் பள்ளி எங்கு படித்தாலும் சரி) தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லவும். படித்து விட்டார்கள் என்றால் வாழ்த்துங்கள். படிக்கவில்லை என்றால் இறக்கி வைத்துள்ள பிடிஎப்ஃ (PDF) படவடிவக் கோப்பைத் திறந்து ஒவ்வொரு அட்டையாகப் படிக்கச் சொல்லவும். 32 அட்டைகளையும் வரிசையாக முழுமையாகப் படிக்கச் சொல்லவும். எந்த அட்டையில் படிக்கத் தடுமாறுகிறார்களோ அந்த அட்டையில் உள்ள
எழுத்துகள் அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த எழுத்தை மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதும். அவர்கள் படித்து விடுவார்கள். படிக்கத் தெரியாத ஒருவரை நீங்கள் படிக்க வைத்துவிட்டால், நீங்கள் அவருக்குக் கண் கொடுத்தவராகிறீர்கள்.

32 தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகளை எப்படிச் சிறப்பாக நடத்துவது என்பதற்கான காணொளி கீழே உள்ளது.

https://www.youtube.com/watch?v=t12K_6hnSZg

32 அட்டைகள் கணினியில் காணச் செடுக்கவும்.

http://www.thamizham.net/kal/ttenglish/cards32-u8.htm

32 அட்டைகளை 14 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இனி 14 மொழி பேசுபவர்களும் இந்த அட்டைகளைப் பயன்படுத்தித் தமிழ் கற்றுக் கொள்ளலாம்.

http://www.thamizham.net/32cardslanguagelist.htm

32 அட்டைகளைக் கணினியில் மாணவர்கள் பார்க்கும் வகையில் அமைந்த மென்பொருள் இது. இதனை unzip செய்து கணினியில் நிறுவினால் எழுத்தை எழுதிக்காட்டும், ஒலித்துக் காட்டும், 32 அட்டைகளின் அடிப்படையில் அமைந்தது. வெளிநாட்டு மாணவர்கள் தாங்களே கணினியில் தமிழ் படிக்கும் வகையில் அமைந்தது.

No comments:

Post a Comment