Wednesday, 16 March 2016

Story



தினம் ஒரு குட்டிக்கதை.

அதிக ஆசை வேண்டாமே!

உணவகம் சென்ற நண்பர் அங்கிருந்த அறிவிப்பு பலகையை பார்த்து, படித்து,தேவைக்கு அதிகமாகவே வாங்கி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார்

"நீங்கள் எதை வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ சாப்பிடுங்கள். அதற்கான தொகையை உங்கள் பேரனிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்." என்பதுதான் அறிவிப்பு பலகையில் இருந்த வாசகம்.

சாப்பிட்டு கை கழுவி வெளியில் வந்தவரை தடுத்து நண்பரிடம் ஒரு பில்லை கொடுத்து பணம் காட்டிவிட்டு செல்லுமாறு கூறினார் மற்றொருவர்.

கோபம் தலைக்கேற உணவக பொறுப்பாளரிடம் சென்று, அறிவிப்பு பலகையில் எனது பேரனிடம் பெற்றுக்கொள்வதாக எழுதிவிட்டு என்னிடமே கேட்பது ஏன் என்று கேட்டார்.

பொறுப்பாளர் பொறுமையாக "இது நீங்கள் சாப்பிட்டதற்கு அல்ல. உங்கள் தாத்தா சப்பிட்டதற்கான பில்" என்ற பதிலில் அதிர்ச்சியடைந்து பணம் செலுத்திவிட்டுச் சென்றார்.

அதிவேகம் ஆபத்தானது போல, அதிக ஆசையும் அவசியமானது அல்ல.

No comments:

Post a Comment