Sunday, 6 December 2015
Saturday, 5 December 2015
Thursday, 3 December 2015
Wednesday, 2 December 2015
Tuesday, 1 December 2015
Solve this...
Solve this...
For xmple
24 H in a D
Ans:24 hours in a day.
1) 90 D in a R A
2) 26 L of the A
3) 7 D of the W
4) 7 W of the W
5) 12 S of the Z
6) 52 C in a P
7) 11 P in a C T
8) 5 F on a H
9) 206 B in a B
10) 29 D in F in L Y
For xmple
24 H in a D
Ans:24 hours in a day.
1) 90 D in a R A
2) 26 L of the A
3) 7 D of the W
4) 7 W of the W
5) 12 S of the Z
6) 52 C in a P
7) 11 P in a C T
8) 5 F on a H
9) 206 B in a B
10) 29 D in F in L Y
தமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள்.
தமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள். படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.
Cash - காசு
Name - நாமம்
Vomit - ஒமட்டு
Ginger - இஞ்சிவேர்
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Knowledge / Know - ஞானம் / காண்
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
பின்வரும் வார்தையில S எடுத்திட்டு பாத்தா, அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech - பேச்சு
Speed - பீடு
Sponge - பஞ்சு
Snake - நாகம்
Molecule - மூலக்கூறு
Orate - உரையாற்று
Kill - கொல்
One - ஒன்று
Eight - எட்டு
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Culprit - கள்வன்
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Mind - மதி
Surround - சுற்றம்
Water - ஊற்று
Lemon - இளமஞ்சள்காய் (எலுமிச்சை)
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Roll - உருள்
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Round - உருண்டை
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Attack - தாக்கு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Right - உரியது
Make - ஆக்கம்
Grain - குருணை
Button - பொத்தான்
Cash - காசு
Name - நாமம்
Vomit - ஒமட்டு
Ginger - இஞ்சிவேர்
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Knowledge / Know - ஞானம் / காண்
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
பின்வரும் வார்தையில S எடுத்திட்டு பாத்தா, அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech - பேச்சு
Speed - பீடு
Sponge - பஞ்சு
Snake - நாகம்
Molecule - மூலக்கூறு
Orate - உரையாற்று
Kill - கொல்
One - ஒன்று
Eight - எட்டு
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Culprit - கள்வன்
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Mind - மதி
Surround - சுற்றம்
Water - ஊற்று
Lemon - இளமஞ்சள்காய் (எலுமிச்சை)
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Roll - உருள்
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Round - உருண்டை
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Attack - தாக்கு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Right - உரியது
Make - ஆக்கம்
Grain - குருணை
Button - பொத்தான்
26 letters of the English alphabet
The 26 letters of the English alphabet are so intelligently arranged.... They show you the way of life...."A"lways "B" e "C" ool. "D" on't have "E" go with "F" riends n Family. "G" iveup "H" urting "I" ndividuals. "J" ust "K" eep "L" oving "M" ankind. "N" ever "O" mit "P" rayers. "Q" uietly "R" emember "G" od. "S" peak "T" ruth. "U" se "V" alid "W" ords. "X" press "Y" our "Z" eal.
இது சாப்பாட்டு நேரம்#
"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !
# ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
# லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!
# சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
# பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
# கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
#தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள்!
#தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எழும்பு போல...... அனுபவிக்க முடியாது!!
#தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!
ஏகாதிசி அறிவியல் காரணம்:
==============================
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன.
இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன.
அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும்.
அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன.
அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது.
11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது.
மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது.
இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது.
ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது.
அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம்.
ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது.
வயிறு சுத்தமாகிறது.
ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.
அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது.
அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம்.
அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!
இந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை.
அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை.
திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே.
இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன.
ஆனால் வைதீகர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை.
நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை.
‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன்.
எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடக்கிறது.
கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா?
எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை.
பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.
அடுத்தது சங்கல்பம்.
மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம்.
அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம்.
இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல்.
அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது.
மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார்.
அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும்.
நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’
பெண்ணின் தந்தை சொல்கிறார்:
‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே!
இதோ உங்கள் ஆசனம்!
உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’
பின் கன்யாதானம்!
பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்:
‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன்.
இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள்.
இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள்.
அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’
மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்:
‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது:
‘‘ஓ விஷ்ணுவே!
அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன்.
இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும்.
எனக்கும் முக்தி கிடைக்கட்டும்.
அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்!
அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும்.
பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்சியாய் நிற்கட்டும்!
’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.
மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள்.
மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன்.
இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன்.
எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’
அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும்.
அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும்.
பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’
இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம்.
அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள்.
முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக!
உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள்.
பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.
மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன்.
இது ‘சப்தபதி’ எனப்படுகிறது.
அப்போது சொல்லும் மந்திரம்:
‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன்.
முதலடி நிறைவான உணவுக்காக.
இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும்.
மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக.
நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக.
ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக.
ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக.
ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக.
நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக!
என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ.
இப்போதிலிருந்து நாம் நண்பர்கள்.
இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம்.
எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம்.
எதையும் இணைந்தே செய்வோம்.
ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம்.
ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம்.
நீ கவிதை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்-
நீ அதையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக!
இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’
அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்:
‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம்.
இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள்.
இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்!
தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்!
இந்திரனே!
இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக!
இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக.
அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக.
மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக!
ஓ, மணமகளே!
உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம்.
எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’
மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது:
‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக!
உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக!
அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக!
’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார்.
அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள்.
அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான்.
இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள்.
‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய்.
நீ உறுதியின் ஊற்று!
வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு.
நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ.
உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’
பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக!
உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க.
இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு.
நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக.
உன் கணவன் வீட்டின் ராணியாயிரு.
உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் மற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.
’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’
பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும்.
அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக.
என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க!
உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’
இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள்.
திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்
அருமையான பதிவு படித்தது பகிர்கிறேன்
ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,
மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.
10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –
அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.
அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.
இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.
உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.
இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே.,
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.
கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்.......
ஒரு சராசரி மனிதனின் உடலில்
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!
நீதிமன்றம்
உச்சநீதிமன்றம் - Supreme Court
உயர்நீதிமன்றம் - High Court
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
அமர்வு நீதிமன்றம் - Sessions Court
உரிமையியல் வழக்குகள் - Civil Cases
குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
கட்சிக்காரர் - Client
சங்கதி - Fact
மறு விசாரனை - Re Examination
ஆபத்தான கேள்வி - Risky Question
தடாலடி பதில் - Fatal Reply
குறுக்கு விசாரனை - Cross Examination
உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
குற்றவாளி - Offender
குற்றச்சாட்டு - Charge
மெய்ப்பிப்பு - Proof
சொத்து - Property
குற்றம் - Offense
கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
திருட்டு வழக்கு - Theft Case
திருட்டுப் பொருள் - Stolen Property
பைத்தியம் - Insanity
சான்றொப்பம் - Attestation
சச்சரவு - Affray
தீர்ப்பு - Sentence
அவசரத்தன்மை மனு - Emergent Petition
கீழமை நீதிமன்றம் - Lower court
பரிகாரம் - Remedy
உறுத்துக் கட்டளை - Injection Order
நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
வழக்கின் மதிப்பு - Suit Valuation
வழக்குரை - Plaint
வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
பண வழக்கு - Money Suit
அவதூறு வழக்கு - Defamation Suit
வறியவர் வழக்கு - Pauper Suit
எதிர்வுரை - Counter
எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
மேல்முறையீடு -Appeal
வரைமொழி வாதுரை - Written Argument
குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
கோருரிமை மனு - Claim Petition
தடை நீக்கம் - Removal of obstruction
வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
எதிர் மேல்முறையீடு - Cross Appeal
எதிர் மறுப்பு - Cross-objection
வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
உயர்நீதிமன்றம் - High Court
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
அமர்வு நீதிமன்றம் - Sessions Court
உரிமையியல் வழக்குகள் - Civil Cases
குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
கட்சிக்காரர் - Client
சங்கதி - Fact
மறு விசாரனை - Re Examination
ஆபத்தான கேள்வி - Risky Question
தடாலடி பதில் - Fatal Reply
குறுக்கு விசாரனை - Cross Examination
உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
குற்றவாளி - Offender
குற்றச்சாட்டு - Charge
மெய்ப்பிப்பு - Proof
சொத்து - Property
குற்றம் - Offense
கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
திருட்டு வழக்கு - Theft Case
திருட்டுப் பொருள் - Stolen Property
பைத்தியம் - Insanity
சான்றொப்பம் - Attestation
சச்சரவு - Affray
தீர்ப்பு - Sentence
அவசரத்தன்மை மனு - Emergent Petition
கீழமை நீதிமன்றம் - Lower court
பரிகாரம் - Remedy
உறுத்துக் கட்டளை - Injection Order
நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
வழக்கின் மதிப்பு - Suit Valuation
வழக்குரை - Plaint
வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
பண வழக்கு - Money Suit
அவதூறு வழக்கு - Defamation Suit
வறியவர் வழக்கு - Pauper Suit
எதிர்வுரை - Counter
எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
மேல்முறையீடு -Appeal
வரைமொழி வாதுரை - Written Argument
குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
கோருரிமை மனு - Claim Petition
தடை நீக்கம் - Removal of obstruction
வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
எதிர் மேல்முறையீடு - Cross Appeal
எதிர் மறுப்பு - Cross-objection
வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
தமிழில் உயிர் எழுத்துக்கள்
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12. இதனைக் கொண்டே அனைத்துச் சொற்களும் உருவாகின்றன.ஆதாவது உடல் இயங்க உயிர் போன்றது.
எனவே இந்த அ முதல் ஔ வரை இங்கே குறிப்பிடும் சொற்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றினால் வாழ்க்கை எப்பொழுதும் உயிரோட்டமாக அமையும்.
அன்பு ➡ அனைவரிடமும் அன்பு ஆர்வம்➡ ஆற்றலாற்றிட ஆர்வம்
இன்சொல்➡ இல்லாதவரிடமும் இன்சொல்
ஈகை➡ ஈடுபாட்டுடன் ஈகை
உழைப்பு➡ உண்மையான உழைப்பு
ஊக்கம்➡ ஊசலின்றி ஊக்கம்
எளிமை➡எப்பொழுதும் எளிமை
ஏற்றம்➡ஏற்படுத்திடு ஏற்றம்
ஐக்கியம்➡ஐயப்பாடின்றி ஐக்கியம்
ஒழுக்கம்➡ஒவ்வொன்றிலும் ஒழுக்கம்
ஓதல்➡ஓங்கலுடன் ஓதல்
ஔவை➡ ஔவியமறைய ஔவைமொழி.
அஃகம் -இரா.தேன்மொழி.
தி.மலை.மா
எனவே இந்த அ முதல் ஔ வரை இங்கே குறிப்பிடும் சொற்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றினால் வாழ்க்கை எப்பொழுதும் உயிரோட்டமாக அமையும்.
அன்பு ➡ அனைவரிடமும் அன்பு ஆர்வம்➡ ஆற்றலாற்றிட ஆர்வம்
இன்சொல்➡ இல்லாதவரிடமும் இன்சொல்
ஈகை➡ ஈடுபாட்டுடன் ஈகை
உழைப்பு➡ உண்மையான உழைப்பு
ஊக்கம்➡ ஊசலின்றி ஊக்கம்
எளிமை➡எப்பொழுதும் எளிமை
ஏற்றம்➡ஏற்படுத்திடு ஏற்றம்
ஐக்கியம்➡ஐயப்பாடின்றி ஐக்கியம்
ஒழுக்கம்➡ஒவ்வொன்றிலும் ஒழுக்கம்
ஓதல்➡ஓங்கலுடன் ஓதல்
ஔவை➡ ஔவியமறைய ஔவைமொழி.
அஃகம் -இரா.தேன்மொழி.
தி.மலை.மா
Subscribe to:
Posts (Atom)